• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
November 24, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பெருமாள் கோவில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புகழ்பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை இப்போதே துவங்கப்பட்டு நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில்; பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை துவக்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் அடுத்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. அதனையொட்டி கல்மண்டபத்திற்கான கல் தூண் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளோம். இந்த கட்டுமான பணிகள் இனி வேகமாக நடைபெறும். பல தொழிலதிபர்கள் பங்களிப்புடன் கட்டுமான பணிகள் நடைபெறும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள திருக்கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 1400க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது, என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மார்க்கெட் மேலாளர் சங்கர், முருகன் யாதவ், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மற்றும் கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பஞ். தலைவர் சரவணக்குமார் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டார்

Next Post

கனிமொழி எம்.பியின் முயிற்சியால், மூதாட்டிக்கு 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் திரும்ப வழங்கப்பட்டது

Next Post
கனிமொழி எம்.பியின் முயிற்சியால், மூதாட்டிக்கு 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் திரும்ப வழங்கப்பட்டது

கனிமொழி எம்.பியின் முயிற்சியால், மூதாட்டிக்கு 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் திரும்ப வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In