தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி எடப்பாடியிடம் வாழ்த்துப் பெற்றார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழிகாட்டுதலின்படி அதிமுகவில் பணியாற்றி வரும் வக்கீல் மந்திரமூர்த்தி உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வரும் அவர் தொடர்ந்து மாநகராட்சியில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பொதுமக்களின் குறைகளை முன்வைத்து கேள்வி கேட்டும், அவற்றிற்கு தீர்வு கிடைக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதே போல், நீதிமன்றத்திலும், ஏழை-எளியவர்களுக்கு தேவையான நீதி கிடைப்பதற்கும், தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அதிமுக 2024-ல் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நெல்லை மண்டலத்திற்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக தூத்துக்குடி மாநகராட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தியை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார்.
இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்: வரும் நாடாளுமன்ற தேர்தலில், தகவல் தொழில்நுட்ப அணியினரின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். இப்போது, சமூக வலைதளம் அபார வளர்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் தொழில்நுட்பத்திற்கு இந்த அணியின் பங்கு முக்கியமானதாகும். அதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அதே வேளையில் வழக்கறிஞர் என்ற முறையில் ஆளுங்கட்சியினரால் நமது கட்சியினருக்கு இடையூறு ஏற்பட்டால் அதற்கான சட்டஉதவிகளை செய்து கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

