தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் வடிவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்;சி 15வதுவார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் குறைகளை போக்கும் விதமாக பிஎன்டி காலனி பகுதியில் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டு அப்பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளையும் பார்வையிட்டார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: இந்த பகுதியில் சில இடங்களில் புதிய வடிகால்;கள் வரும் நாட்களில் அமைத்துக் கொடுக்கப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது, கவுன்சிலர் இசக்கிராஜா, வட்ட செயலாளர் பொன்பெருமாள், திமுக முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் ஜோஸ்பர் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

