• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது

policeseithitv by policeseithitv
November 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் – மீனவர்; நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி தெரிவிக்கையில்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்டம், பிரதமமந்திரி குடியிருப்புதிட்டம், பிரதமமந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், கிராம முன்னோடி திட்டம், ஜல் ஜீவன் மிஷன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சி திட்டம், தூய்மைபாரத இயக்கம், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா, தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ராஷ்டீரியகிருஷி விகாஸ் யோஜனா, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண்வள அட்டை திட்டம், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா, ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலகு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மைபாரத இயக்கம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், பிரதம மந்திரியின் இலவச எரிவாயு இணைப்பு திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பிரதம மந்திரி கனிமவள அறக்கட்டளை, தேசிய சுகாதாரத் திட்டம், ஜனனிசி சுசுரக்ஷித்; திட்டம், தேசிய குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்புறம்) அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டம், சர்வசிக்ஷ அபியான், தேசிய ஊரக குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், தீனதயாள் உபாத்தியாய கிராமமின் வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதில் ஏழை, எளிய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய மீதமுள்ள இலக்கினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாரத பிரதமர் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின ;கீழ் 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊரக குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுடன் ஊரக சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் இணைத்திடவும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், கல்லூரிகள் ஆகிய அத்தியாவசிய இடங்களுக்கு அருகாமையில் வசிக்கும் கிராமமக்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே, இத்திட்டத்தில் முழுகவனம் செலுத்தி விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தூய்மைபாரத இயக்கத்தின்கீழ் திறந்த வெளிமலம் கழித்தல் அற்றஊராட்சி என்ற நிலையில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைந்த ஊராட்சியாகவும், சுகாதார ஊராட்சியாகவும் மாற்றிட ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பைகள், மக்காகுப்பைகள் என பிரித்து சேகரித்து மக்கும் குப்பைகளை நுண்ணுயிர் குழி மையத்தில் சேகரித்து வைத்து அதன் மூலம் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரித்து இதுபோன்று இயற்கை உரம் தயார் செய்வதோடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக அந்தந்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் ஊராட்சிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கிலோ ஒன்றிற்குரூ.10 வீதம் வாங்கப்பட்டு நறுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் நறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சாலை அமைக்கும் பணிகளுக்கு கிலோரூ.40 வீதம் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கொள்முதல் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியினை விரைந்து செயல்படுத்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீரினை உயர்த்திடவும், குடிநீர் ஆதாரத்தினை பெருக்கிடும் விதமாக அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்திடவும், கழிவு நீர்களை உறிஞ்சி குழாய் மூலமாக மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு உபயோகப்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனதுறை சார்ந்த அலுவலர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

0-6 வயதுகுழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இணை உணவு, வளர்ச்சி கண்காணிப்பு, தடுப்பூசி, மருத்துவ பரிந்துரை, முன்பருவக்கல்வி, சத்துணவு மற்றும் சுகாதாரக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் மேலும் தொடரதுறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையினை கணக்கெடுத்து அங்கன்வாடி மையம் பணியாளர் வாயிலாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்கிட உரியநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இலவச எரிவாயு இணைப்பு பெறதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, காடுகளில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினர், தேயிலைதோட்டங்களில் பணிபுரிபவர்கள், தீவுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களில் தகுதியானவர்களை கண்டறிந்துஅவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கிட உரியநடவடிக்கை மேற்கொள்ள துறைசார்ந்தஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மியாவாக்கி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் அநேக குறுங்காடுகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை மாவட்டமாக மாற்றுவதோடு அதிகமழை பொழியவும், குடிநீர் ஆதாரத்தினை பெருக்கிடவும் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் நோக்கம் அறிந்து அரசுதிட்டங்களை செயல்படுத்துவது குறித்துஆராய்ந்து இத்திட்டம் வெற்றியடையும் வகையில் செய்திட திட்டமிட வேண்டும். தேவைப்படும் இடத்தில் நிதியினை பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் கனிமொழிஎம்.பி தலைமையில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது ஒருவார காலத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு இலவசவீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, நத்தம் பட்டா, பாட்டா மாறுதல் உத்தரவுகளையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் மற்றும் இலவச தேய்ப்புப் பொட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்குஅதிநவீனசக்கரநாற்காலிகளையும்,வேளாண்மைமற்றுமஉழவர் நலத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு இடுப்பொருட்களையும், ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி சார்பில் மருத்து வமுகாம் வாயிலாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 157 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அலிம் கோநிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யபட்ட மூன்று சக்கரவண்டி, சக்கரநாற்காலி, தள்ளுவண்டி, மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி, காதொலிகருவி, ஊன்றுகோல், மூளை முடக்குவாத உபகரண பயிற்சிப் பெட்டி, பிரெய்லி உபகரணம், ஸ்மார்ட் போன் போன்றி உபகரணங்களையும் என மொத்தம் 198 பயனாளிகளுக்கு ரூ.18.27 இலட்சம் மதிப்பிலான அரசுநலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 07.11.2023 மற்றும் 08.11.2023 ஆகிய நாட்களில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளான திருப்பணிபுத்தன்தருவை மற்றும் செட்டிகுளம் ஆகிய ஊராட்சிகளில்; நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சிகளில் அங்கன்வாடி மையக் கட்டிடம் வேண்டி மனுஅளித்த ஊர்பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளிலும் தலாரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடிமையக் கட்டிடங்கள் கட்டுவதற்கான செயல்முறை ஆணைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி;, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், திட்ட இயக்குநர் வீரபுத்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் – கனிமொழி எம்.பி. பேச்சு

Next Post
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் – கனிமொழி எம்.பி. பேச்சு

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் - கனிமொழி எம்.பி. பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In