தூத்துக்குடி மாநகராட்சி பகுதிட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் குறைகளை போக்கும் விதமாக கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் மற்றும் தார்சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்தார்.
அதிமுக கவுன்சிலர் பத்மாவதி, வடக்கு பகுதி அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான செண்பகச்செல்வன், திமுக முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் திமுக மகளிர் அணி சந்தனமாரி, உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

