தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களைக் கடத்தலை தடுக்கவும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் நோக்கத்துடன், தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜி. லட்சுமிபதி ஐ.ஏ.எஸ்., விமான நிலைய இயக்குநர் எஸ்.ஆர்.ராஜேஷ், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி எஸ்.சத்தியராஜ், மத்திய புலனாய்வுப் பணியக அதிகாரி ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மரைன் கமாண்டோக்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியன் கோஸ்ட் கார்டு மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், தூத்துக்குடி விமான நிலையத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

