தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியான 33வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அப்பகுதி மக்கள் சின்னமணிநகரில் புதிய கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 11லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு சின்னமணிநகரில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், வட்ட அவைத்தலைவர் சுபாஷ், துணைச்செயலாளர் அருணா, வட்டப்பிரதிநிதிகள் செல்வக்குமார், பாஸ்கர், வார்டு நிர்வாகிகள் செந்தூர்பாண்டி நாடார், சௌந்தர்ராஜன், தமிழ், கண்ணன், பெருமாள், ஆரோக்கியராஜ், சேக்மியான், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஆனையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

