தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அன்னை தெரசா நகர் முத்துகிருஷ்ணா நகர் பாரதிநகர் ராஜகோபால்நகர் ஆகிய பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்கிய பகுதிகளில் நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் மாநகர பகுதிகளில் ஏற்கனவே சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். தற்போது மீதமுள்ள பகுதிகளிலும் வரும் நாட்களில் பணிகள் விரைந்து நடைபெறும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, தனிநபர் இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தால், அந்த பள்ளங்களை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி மாநகர மக்களை கேட்டுக்கொள்கிறேன், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
உள்பட மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

