தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியான 19வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அப்பகுதி மக்கள் மகிழ்ச்சிபுரம் குறுக்கு 2 தெருவிற்கு புதிய கால்வாய் வசதியும்; சாலை வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 6 லட்சம் வீதம் 12 லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு மகிழ்ச்சிபுரத்தில் புதிய கால்வாய் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், கவுன்சிலர் சோமசுந்தரி, திமுக வட்டச்செயலாளர் பத்மாவதி சந்திரமோகன், துணைச்செயலாளர்கள் மாரிமுத்து, தர்மர், வட்டப்பிரதிநிநிகள் மேகநாதன், சுடலைமணி, ஜெபஸ்தியான், மாடசாமி, அமிர்தலிங்கம், அவைத்தலைவர் முனியசாமி, பொருளாளர் சீனிமுகமது, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஆனையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

