• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
November 13, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 3வது வார்டு பகுதியான ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம்; தொடங்கப்பட்டதை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட பின் கூறுகையில்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தப் பகுதி ஒருகாலத்தில் காடாகவும், பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும் மண் சாலையாகவும், இருந்தது. 3வது வார்டு உறுப்பினராக ரெங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 80 சதவீதம் புதிய சாலை கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளன. தூத்துக்குடிக்கு எப்போதாவது தான் கனமழை பெய்யும். அப்படி பெய்த காலத்தில் இந்த பகுதியில் முட்டு அளவிற்கு மழைநீர் தேங்கி கிடக்கும்.

அந்த சமயத்தில் மக்கள் வெளியில் வரமுடியாத நிலை வரும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி பாதிக்கப்பட்ட போது, அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் இங்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தி.மு.க ஆட்சி அமைந்த பின் அதற்கான தனித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனையின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெய்யும் மழைத்தண்ணீர் ஒருபகுதி கால்வாய் வழியாக, புதூர் பாண்டியாபுரம் ஓடைப்பகுதியில் செல்லும் வகையிலும், மற்றறொரு பகுதி பக்கிள் ஓடை பகுதியில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 130 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகின்றன. அது முழுமையாக ஜனவரி மாதம் முடிவடையும். 60 வார்டு பகுதிகளிலும் வீடுகளுக்கு சென்று தினமும் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து 583 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குப்பை கிடங்கு பகுதியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மக்கும் குப்பைகளை அதற்கு உரமாக வழங்கப்படுகிறது. மற்ற சில கழிவுகளை பல பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன. இந்த சாலையையும் விரிவுபடுத்தும் பணி நடைபெற உள்ளது. இப்போது புதிதாக தார்சாலை அமைக்கும் ரோடு இந்த தொகுதியில் அதிமுக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓருவர் பணியாற்றிய காலத்தில் கூட சாலை அமைக்கப்படவில்லை. மாநகரம் முழுவதும் நடைபெறுகின்ற அனைத்து நல்ல பணிகளுக்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது மாநகராட்சி கணக்குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், திமுக நிர்வாகிகள் பால்ராஜ், செல்வராஜ், கணேசன், வேல்முருகன், ஹரி, சுடலை, ஜவஹர், ராஜாமணி, ராஜா, அண்ணாத்துரை, மக்குல்பாட்ஷா மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post

தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி விழா கோலாகலம் : வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

Next Post

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In