எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரைச் சேர்ந்த உத்திரகுமார் (58) என்பவருக்கு சொந்தமான கலர் சோடா நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஷெட்டில் 17½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு உத்திரகுமாரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
