சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு, வருகின்ற ஏப்ரல் மாதம் (06.04.2021) நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பணியாற்ற விருப்பமுள்ள 65 வயது நிரம்பாத முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விருப்ப மனு அளிக்கலாம், அவ்வாறு தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும்.
மேலும் தங்களது விருப்பமனுவுடன் வாக்காளர் அட்டையின் நகல் இணைத்து வழங்க வேண்டும் என்றும், தேர்தலில் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்கள், துணை இராணுவத்தினர்கள் காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் அவர்களை அலைபேசி எண் 83000 06260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம்,
அதே போன்று விளாத்திக்குளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்கள், துணை இராணுவத்தினர்கள் காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி அவர்களை 94981 95709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். ஓய்வு பெற்ற காவல்துறையினர் காவல் ஆய்வாளர் ஆல்பின் பிர்ஜித் மேரி அவர்களை 94883 23426 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இது சம்மந்தமாக சந்தேகங்கள் ஏதுமிருப்பின் முன்னாள் படை வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண். 0461 2341248 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
