தூத்துக்குடி.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இயக்கத்தை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் உற்ற நண்பனாகவும், திருட்டு, கொலை, கொள்ளை மற்றும் போதை ஆசாமிகளின் அட்டூழியங்கள் போன்றவற்றை தடுத்திடும் ஆயுதமாக விளங்குவது மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள். இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் குற்ற சம்பவங்கள், சமூக விரோதிகளின் நடமாட்டங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனவே,சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொறுத்திட அரசு வலியுறுத்தி வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட கணேசன் காலனி 3வது தெரு சந்திப்பு மற்றும் அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை இயக்கத்திற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த்சேகரன், பகுதிச் செயலாளர் இராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், வட்டச் செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

