தூத்துக்குடி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்வையற்றோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையை சேர்ந்த பார்வையற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதிகள் வேல்முருகன், பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

