தூத்துக்குடி, நவ,9
தூத்துக்குடியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியுள்ள கதிர்வேல் நகர் பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு
மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று பெய்த கனமழையால் பி அன்டு டி காலனி, புஷ்பா நகர் மற்றும் கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். மேலும் மழைநீரை உடனடியாக அகற்றும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டக் செயலாளர் பொன்னுச்சாமி, மாமன்ற உறுப்பினர் கண்ணன், மணி ஆல்பர்ட் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

