• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
November 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தூத்துக்குடியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் லெட்சுமிபதி தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி எம்.பி., கனிமொழி பயனாளிகளுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கி, பேசுகையில்: கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் முதல் கட்டமாக 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது இரண்டாம் கட்டத்தையும் சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது உதவித்தொகை அல்ல, பெண்களுக்கான உரிமைத்தொகை. வீட்டில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்கும் பெண்களுக்கு கொடுக்கும் அங்கீPகாரம். ஒரு காலக்கட்டத்தில் 13, 14 வயதில் பெண்களுக்கு திருமணம் நடைபெற்று குழந்தைகள் பெற்றெடுக்கும் நிலை இருந்தது. இதை மாற்ற வேண்டும் என்று கலைஞர் முடிவெடுத்து 10ம் வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டத்தை அறிவித்து பெண்களை படிக்கச் செய்தார். அதனால் இன்று இந்தியாவில் தமிழகத்தில் தான் கல்வி கற்றவர்கள் அதிகம் பேர் உள்ளனர். கலைஞர் கொடுத்த பல்வேறு திட்டங்களை பின்பற்றி இன்று நம்முடைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்லூரி உதவித்தொகை, இலவச பஸ் பயணம் என்று பல வழங்கி வருகிறார். பெரியார் கொண்டு வந்த திட்டத்தை சட்டமாக்கி பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை வழங்கியது கலைஞர். திருமணம் முடிந்ததும் திரும்ப வராதே என்று சொல்லும் நிலை பெற்றோர்களால் இருந்ததை மாற்றியது கலைஞர். உங்களுக்கு கொடுக்கப்படும் இந்த உரிமைத்தொகை யாரையும் எதிர்பாராமல் உங்களது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் திமுகவிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும், என்று பேசினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: கலைஞர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவிக்குழு, இலவச வீட்டுமனை பட்டா என்று பல்வேறு உரிமைகளை வழங்கினார். உள்ளாட்சியில் தளபதியார் ஆட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உரிமைத்தொகை 17 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும் விடுபடாமல் வழங்கப்படும். பெண்களின் படிப்பு, எதிர்காலம் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் முதல்வருக்கு நாம் துணை நிற்க வேண்டும். தமிழகத்தின் பல திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று பேசினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்: கலைஞர் ஏழை, எளியவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தாய்மார்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியிலேயே தளபதியார் 1 முதல் 12 வரை அரசு பள்ளியில் படித்து, கல்லூரி படிப்பிற்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறார். மேலும் விடுபட்டவர்களுக்கும் ஆய்வு செய்து வழங்கப்படும் என்று தெரிவித்;துள்ளார். முதல்வரின் முத்தான திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்கண்டேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப் கலெக்டர் கௌரவ்குமார் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார்கள் பிரபாகர், ஜான்சன், செல்வகுமார், மல்லிகா, ராமகிருஷ்ணன், சுரேஷ், லெனின், கைலாச குமாரசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி நிர்மல்ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் அபுல்ஹாசன், ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் வீரபுத்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் கோவில் தலைவர் செந்தில்குமார், பொதுகுழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இ.ராஜா, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், கவுன்சிலர்கள் சரண்யா, விஜயகுமார், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ராமுத்தம்மாள், சரவணக்குமார், மரிய கீதா, மகேஸ்வரி, தனலெட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் செல்வகுமார், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், அருண் சுந்தர், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், குமரன், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் மீனாட்சிசுந்தரம், ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா மற்றும் கருணா, மணி, பிரபாகர், அல்பர்ட், சந்தனமாரி உள்பட அரசு துறையைச் சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு   உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”

Next Post

தொழிலாளர்களின் நலன்காக்கும் அரசாக திமுக இருக்கிறது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Next Post
தொழிலாளர்களின் நலன்காக்கும் அரசாக திமுக இருக்கிறது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தொழிலாளர்களின் நலன்காக்கும் அரசாக திமுக இருக்கிறது - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In