தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக ஆட்சி அமைந்தபின் மாநகராட்சி சார்பில் தார்சாலை பேவர் பிளாக் சாலை மாநகராட்சி நிதி மற்றும் தமிழக அரசின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைகாலத்திற்கு முன்பு அனைத்து பகுதிகளிலும் முழுமையான பணி நடைபெற வேண்டும். என்று ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு செல்விஜர் முதலாவது மற்றும் இரண்டாவது தெரு பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதாரக்குழு தலைவர் சுரேஷ்குமார்;, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

