தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்ட போது கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவில் புதிய கால்வாய் வசதி, அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர திமுக அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மற்றும் கருணா, மணி, சந்தனமாரி, உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

