குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் கோப்பெருந்தேவி (வயது19) என்பவர் நல்லமணி யாதவர் கல்லூரியில் தனது இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி) தொடர முடியாமல் தவித்து வந்தார். தென்காசி ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் அவர்களிடம் பணம் உதவி கேட்டு வந்துள்ளார்.
கோப்பெருந்தேவியின் குடும்ப வறுமையை அறிந்த தென்காசி காவல் ஆய்வாளர் இரண்டாம் ஆண்டு பரிட்ச்சைக்கு தேவையான செலவு பணம் ரூபாய் 10 ஆயிரத்தை உடனடியாக கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் வேலையில்லாமல் இருந்த அவருடைய அண்ணன் பட்டதாரியான செல்வ கணேஷ்க்கு தென்காசியில் தனியார் நிறுவனத்தில் வேலை ஏற்பாடு செய்து கொடுத்து குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார்.
இச்செய்தியை அறிந்த பொது மக்கள் தென்காசி ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகனை மனதார பாராட்டினர்.

