தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கணக்கு குழுத்தலைவரும், கவுன்சிலருமான ரெங்கசாமி தலைமையில் ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மைப் பணியாளர்கள் 60 பேருக்கு சீருடைகள் இனிப்புகள் வழங்கி பேசுகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தப் பகுதி ஒருகாலத்தில் காடாகவும், பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும் மண் சாலையாகவும், இருந்தது. மூன்றாவது வார்டு உறுப்பினராக ரெங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 80 சதவீதம் சாலை கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளன. தூத்துக்குடிக்கு எப்போதாவது தான் கனமழை பெய்யும். அப்படி பெய்த காலத்தில் இந்த பகுதியில் முட்டு அளவிற்கு மழைநீர் தேங்கி கிடக்கும்;.
அந்த சமயத்தில் மக்கள் வெளியில் வரமுடியாத நிலை வரும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி பாதிக்கப்பட்ட போது, அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தி.மு.க ஆட்சி அமைந்த பின் அதற்கான தனித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தார் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெய்யும் மழைத்தண்ணீர் ஒருபகுதி கால்வாய் வழியாக, புதூர் பாண்டியாபுரம் ஓடைப்பகுதியில் செல்லும் வகையிலும், மற்றறொரு பகுதி பக்கிள் ஓடை பகுதியில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 130 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகின்றன. அது முழுமையாக ஜனவரி மாதம் முடிவடையும். 60 வார்டு பகுதிகளிலும் வீடுகளுக்கு சென்று தினமும் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து 583 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குப்பை கிடங்கு பகுதியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மக்கும் குப்பைகளை அதற்கு உரமாக வழங்கப்படுகிறது. மற்ற சில கழிவுகளை பல பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன. இந்த சாலையையும் விரிவுபடுத்தும் பணி நடைபெற உள்ளது. மாநகரம் முழுவதும் நடைபெறுகின்ற அனைத்து நல்ல பணிகளுக்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு 60 வார்டுகளிலும், கவுன்சிலர்கள் மூலம் மாதந்தோறும் தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். நானும் என்னால் முடிந்த உதவிகளை முழுமையாக செய்து கொடுத்து வருகிறேன் மாநகரின் வளர்ச்சிக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று பேசினார். விழாவில் மாநகராட்சி பணிக்குழத் கீதா முருகேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், திமுக நிர்வாகிகள் பால்ராஜ், செல்வராஜ், கணேசன், வேல்முருகன், ஹரி, சுடலை, ஜவஹர், ராஜாமணி, ராஜா, அண்ணாத்துரை, மக்குல்பாட்ஷh மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

