தூத்துக்குடி,
நவ, 7
தூத்துக்குடி
கோரம்பள்ளம் பகுதியில் ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சிம் வாட்டர் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் அவர்களிடம்
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் ஆகியோர் திரளாக வந்து புகார் மனு அளித்தனர். இந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகள் விவசாய பூமி ஆகும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள், விவசாயத்தை நம்மிதான் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி
வருகின்றனர்.

இந்நிலையில்
கோரம்பள்ளம் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கும் வகையில் தனியார்
வாட்டர் கம்பெனி
ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி அதனை சுத்திகரித்து நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்
வணிக நோக்கத்தோடு விற்பனையில் ஈடுபடுவதாகவும், பல தொழில் நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கும் குடிநீரை சப்ளை செய்யப்படுவதாகவும் தெரிய வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட வருகின்றனர்.
கோரம்பள்ளம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
அவர்களுடைய நிலங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதோடு நீரின் தன்மையும் மாறி வருகிறது.
அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல் தண்ணீரை ராட்சச குழாய் மூலம் உறிஞ்சும் தனியார் தண்ணீர் கம்பெனியை உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள்,
BIS மார்க் (Bureau of Indian Standards) துறை சார்ந்த அதிகாரிகள், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர்வளம் )
மற்றும் பாக்டீரியோலாஜிகல் சோதனை செய்யும் அதிகாரிகள் சகிதம் இந்த வாட்டர் கம்பெனியில் சோதனை மேற்கொண்டால்
பல்வேறு விதிமுறை
மீறல்கள் தெரியவரும், குடிநீர்
கேன்களை குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது விதிமுறை ஆனால் 1 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பழைய கேன்ளில் தான் குடிநீர் நிரப்புகிறார்கள். நாள்பட்ட கேன்களில் தண்ணீரை அடைக்கும்போது அதன் மூலம் பாக்டீரியாக்கள் உருவாகும். நிலை ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆகையால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில்
ராட்சத குழாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி வாட்டர் கம்பெனி நடத்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கோரம்பள்ளம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தங்களது மனுவில் பரப்பான புகாரை வழங்கினர். இந்த நிகழ்வின்போது
சண்முகவேல், சக்தி,கதிர், செவத்தையாபுரம் சரவணன், விஷ்ணு, குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

