தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி (27/10/2023 ) அன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 1 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, 1 பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.2,243 என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
நிகழ்வில்,வல்லநாடு ஊராட்சியை சார்ந்த முத்து கணபதி அவர்கள் வாகைக்குளம் – வல்லநாடு மின்பாதையில் மின்வயர் மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து இன்று (06/11/2023) வகைக்குளம் – வல்லநாடு பகுதியில் மின்வாரிய ஊழியர்கள்,சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் மற்றும் மின்வயர்கள் பொருத்தப்பட்டது.

