தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 46வது பட்டமளிப்பு விழா 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா வ.உ.சிதம்பரம் கல்லூரியில், கல்லூரி கல்விக் குழுத் தலைவர் சொக்கலிங்கம், கல்லூரி செயலாளர் சுப்புலட்சுமி சொக்கலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
துறைத்தலைவர்களின் அலங்கார அணிவகுப்பைத் தொடர்ந்து கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெங்களுர் ஆதித்யா டு-1 இஸ்ரோ திட்ட இயக்குநர் முனைவர் நிகர்ஷாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 618 இளங்கலை இளம் அறிவியல் மாணவிகளுக்கும், 74 முதுகலை, முதுஅறிவியல் மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கி சிறந்ததொரு கருத்துரை வழங்கினாh.;
பெண்கள் கல்வி கற்று வாழ்வில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ளவும,; தொழில் வல்லுநராக விளங்கவும், அதிகாரம் மற்றும் சமத்துவம் பற்றியும், சமூக மாற்றம் தேவை என்பதைப் பற்றியும் கருத்துரை அமைந்திருந்தது.
பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை முனைவர்கள் சண்முகப்பிரியா, விஜயசாந்தி, ஜோதிலெட்சுமி, செல்லம்மாள், அனுசியா, வாணி ஆகியோர் செய்திருந்தனர்.

