தூத்துக்குடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம்- சுகாதார நடைபாதை க கி.மீ ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் ஹோட்டல் முன்புறம் இருந்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள கொடியசைத்து தொடங்கி வைத்தார்;;.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்பாட்டின் பேரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில், பெல் ஹோட்டல் முன்புறம் இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோச் பூங்கா, படகுகுழாம் வரை 4 கீ.மி தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி பெல் ஹோட்டல் முன்புறம் முடியும் நடைப்பயிற்சி நடைபெற்றது. தருவைக்குளம் மீனவர்கள் மட்டுமல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்களையும் மீட்க ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவில் தவறுதலாக போகும் போது பிடிபட்டிருக்கிறார்கள். 12 பேரரையும் விடுதலை செய்கிறோம், படகை பிடித்துக் கொள்கிறோம் என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது. முதலமைச்சர்; மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து படகோடு அந்த மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஒன்றிய அரசை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், படகுகளை விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கூடிய சீக்கிரம் அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களின் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் ஒன்றிய அரசுதலையிட்டு அதற்கான நடைமுறைகளை எடுக்க வேண்டும். கடந்த வாரம் பிடிப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வேண்டு மென்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற குழுத் தலைவர் பாலு மத்திய உள்துறை இணை அமைச்சர் அவர்களை சந்தித்து அழுத்தத்தை கொடுத்திருக்கின்றார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்காக 346 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறைக்கு வழங்கவேண்டிய டீசல், மற்றும் மருத்துவர்களுக்கு ஒன்றிய அரசு 60 சதவீத மானியமும் மாநில அரசு 40 சதவீத மானியமும் வழங்கும். ஒன்றிய அரசின் பங்களிப்பான 60 சதவீத மானியத்தை வழங்கவில்லை. தற்போது ஒன்றிய அரசு 5 மாதத்திற்கான மானியத்தை வழங்கியுள்ளது. விரைவில் ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்;, சப் கலெக்டர் கௌரவ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மருத்துவ கல்லூரி டீன் சிவக்குமார், போக்குவரத்து வட்டார அலுவலர் விநாயகம், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பகுதி செயலாளர் சிவக்குமார், அரசு வழக்கறிஞர் பூங்குமார், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

