கொடைக்கானல்,நவ,5
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் பெறுவதாகவும் அதே சமயத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளாக வரும் குடிமகன்கள் அந்த கடையில் மதுபாட்டில் வாங்க முற்படும்போது பாட்டிலுக்கு ரூ.50,100 என தங்களது இஷ்டபடி கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்களா ம். கூடுதல் விலை கொடுக்க முடியாது என கூறும் குடிமகன்களை திண்டுக்கல்லில் போய் மது வாங்கிக் கொள்ளுங்கள் கொடைக்கானலில் இதுதான் ரேட்… அரசு சொன்னால் நாங்கள் கேட்கணுமா???என குடிமகன்களிடம் மிரட்டல் தோரணையில் பேசிய வருகிறார்களாம்
இதனால் சுற்றுலா பயணிகளும், கொடைக்கானலில் வசிக்கும் குடி மகன்களும் கடுமையான அதிருப்தில் உள்ளனர். கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள 3155 என்ற அரசு மதுபான கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் புல் பாட்டிலுக்கு 100, முதல் 200 வரை கூடுதலாக மது பாட்டில் விற்பனை செய்கிறார்களா ம் சூப்பர்வைசர் வேல்முருகன் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். சேல்ஸ்மேன் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார்
அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக குடிமகன்களிடம் இந்த கடை ஊழியர்கள் வசூல் செய்வதை கொடைக்கானல் பகுதி குடிமகன்கள் நாள்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் அவர்கள் விலையை குறைக்க முன்வராமல் எங்களது மேலதிகாரி முதல், காவல்துறை வரை நீ எங்கு வேணாலும் சென்று எங்கள் மீது புகார் அளி எங்களை யாரும் ஒன்னும் செய்ய முடியாது எனத்தென வட்டாக பேசி வருகிறார்களாம் இந்தக் கடை ஊழியர்கள்.. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர், டாஸ்மாக் எம்டி வரை கொடைக்கானல் பகுதியில் உள்ள குடிமகன்கள் புகார்கள் தெரிவித்து வருகிறார்களாம்.

அரசு உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக தனியார் கம்பெனி போல் செயல்படும் கொடைக்கானல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் ஆகியோர் மதுவிலக்கு போலீசார் துணையுடன் கடையில் அதிரடியாக ஆய்வு செய்தால்
பல்வேறு முறைகேடுகள்தெரிய வரும் என குடிமகன்கள் தெரிவித்து
வருக்கிறார்கள்
3155 கடையில் உள்ள காலி பாட்டில்களை ரோட்டில் வைப்பதனால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகிறது. பெண்கள், வயதானவர்கள், குடும்பத்தினர்கள் அந்த வழியில் செல்லும் பொழுது இந்த பாட்டில் குவியல்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றன.

இந்த டாஸ்மாக் கடை அருகே சுற்றி குடிமகன்கள் சிறுநீர் கழித்து வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளன. ஆகையால் இந்த கடையை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் கூடுதல் விற்பனையில் ஈடுபடும் இந்த கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்டம் டாஸ்மாக் மேலாளர், மற்றும் கொடைக்கானல் டிஎஸ்பி ஆகியோர் 3155 டாஸ்மாக் கடையின் அத்துமீறல் களுக்கு முடிவு கட்டும் வகையில் நடவடிக்கை விரைவில் பாயும் என குடிமகன்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்பார்த்து வருகின்றனர். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
செய்தி தொகுப்பு: சிறப்பு செய்தியாளர்.

