தூத்துக்குடி
திராவிட முன்னேற்ற கழகம் 1949 செப்டம்பர் 15ல் சென்னை ராபின்சன் பூங்காவில் உதயமான நாட்களுக்கு பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய பங்காக இளைஞரணி திகழ்ந்து வருகிறது. 1960ம் ஆண்டுகளின் இறுதியில் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்த அமைப்பின் பேரில் பல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அது கட்சியின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை.
இந்தநிலையில் 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா திமுக இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. 1980ம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இளைஞரணி அமைப்பின் துவக்கம் திமுக கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த துவக்க விழாவின் போது முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரி மணியம், தங்கப்பாண்டியன், வைகோ, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்தது. திமுகவின் பல்வேறு பேரணிகளில் சீருடைகளுடன் திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர். இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய காலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் பின்னர் சென்னை மேயராகவும் பணியாற்றி கட்சியில் பொருளாளராகவும், 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், கட்சியின் செயல் தலைவராகவும் பணியாற்றிய மு.க.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 வயதை தாண்டிய நிலையிலும் திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலினே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் திமுகவில் இளைஞரணிக்குத் தான் முக்கிய பங்கு வழங்கப்பட்டது. அதன்பின் கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகளை வரைமுறைப்படுத்தி மாணவரணி, மகளிரணி என பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்ட திமுக சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணி என புதிய அணியை உருவாக்கியது. இதை சுட்டிக்காட்டித் தான் தூத்துக்குடியில் நடைபெற்ற இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையின் போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: கடந்த காலத்தில் இளைஞரணி செயலாளராக இருந்த நம்முடைய தலைவர் தான் இன்றைய முதலமைச்சராக பணியாற்றுகிறார். உங்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது என்று இளைஞரணியினருக்கு அறிவுரை வழங்கி பேசியுள்ளார்.
இந்நிலையில், திமுக இளைஞரணி மண்டலம் 9, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கான நேர்காணல் புதுக்கோட்டை சத்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் வக்கீல் ஜோயல், இன்ப ரகு, அப்துல் மாலிக், பிரபு, இளையராஜா, ஆனந்தகுமார், ராஜா, பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர்கள் கலந்து கொண்டு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இளைஞரணிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களிடம் திமுக-விற்காக பங்கெடுத்துக் கொண்ட நிகழ்வுகள், போராட்டங்கள் குறித்து நேர்காணலின் போது கேட்கப்பட்டன.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், சுதாகர், பால்துரை, ஸ்டாலின், குமார் பாண்டியன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார்ரூபன், ஆறுமுகப்பெருமாள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் செல்வகுமார், வீரபாகு, ரகுராமன், சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், பாலசிங், இளங்கோ, கொம்பையா, சதீஷ், பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ், வெயில்ராஜ், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், துணை அமைப்பாளர் டேனியல் ராஜன், அரசு வழக்கறிஞர் பூங்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் சண்முக நாராயணன், மனோஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள்; பகுதி செயலாளர் சிவகுமார், தொழிலாளர் அணி ராஜன், தகவல்தொழில்நுட்ப அணி மாரிச்செல்வம், கிளை செயலாளர்கள் கதிர், நெடுஞ்செழியன், ரமேஷ், நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

