தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தனியார் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சுந்தரபாண்டியன் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் மறைவையொட்டி மார்க்கெட் இயக்குநர்கள் கூட்டத்தில் அவரது மகன் சி.த.சு. ஞான்ராஜ் தலைவராகவும், சி.த.சு மணிராஜ் செயலாளராகவும், செபத்தையாபுரம் பிடி பரமசிவன் பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முன்னாள் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் புதிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு கம்பெணியின் இயக்குநர்கள் பங்குதாரர்கள் வாழ்த்து தெரிவித்த பின் மார்க்கெட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, தொழிலதிபர்கள் பொ.தி பொன்ராஜ், பிரேம் ஆனந்த், பிச்சமுத்து, பிரபாகர், செல்வகுமார், ஜெயபாண்டி, ஜெயராஜ், மற்றும் ரவி, ராஜன், தாளமுத்து, ஜெபஸ்டின், கோயில்ராஜ், ராதா, சந்தோஷ், ஜெஸ்வின், சாம், உள்பட வியாபாரிகள் தொழிலாளர்கள் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

