மதுரை மங்கையர்கரசி கல்லூரி அரங்கத்தில் வைத்து 29:10:23 நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர் இதில் கட்டா மற்றும் சண்டை பிரிவில் சக்தி பாலன், சந்தோஷ், சபரி கிரீஸ் ஆகிய மாணவர்கள் தங்க பதக்கத்தையும் , சிவகண்ணன், இக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும் ,வென்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர் வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்பிக் முழு நேர இயக்குனர் பாலு , ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் பிரேம்சுந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

