• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நேர்காணல் – அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
November 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நேர்காணல் – அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

திராவிட முன்னேற்ற கழகம் 1949 செப்டம்பர் 15ல் சென்னை ராபின்சன் பூங்காவில் உதயமான நாட்களுக்கு பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய பங்காக இளைஞரணி திகழ்ந்து வருகிறது. 1960ம் ஆண்டுகளின் இறுதியில் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்த அமைப்பின் பேரில் பல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அது கட்சியின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை.

இந்தநிலையில் 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா திமுக இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. 1980ம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இளைஞரணி அமைப்பின் துவக்கம் திமுக கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த துவக்க விழாவின் போது முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரி மணியம், தங்கப்பாண்டியன், வைகோ, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்தது. திமுகவின் பல்வேறு பேரணிகளில் சீருடைகளுடன் திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர். இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய காலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் பின்னர் சென்னை மேயராகவும் பணியாற்றி கட்சியில் பொருளாளராகவும், 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், கட்சியின் செயல் தலைவராகவும் பணியாற்றிய மு.க.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 வயதை தாண்டிய நிலையிலும் திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலினே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்போக்கில் திமுகவில் இளைஞரணிக்குத் தான் முக்கிய பங்கு வழங்கப்பட்டது. அதன்பின் கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகளை வரைமுறைப்படுத்தி மாணவரணி, மகளிரணி என பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்ட திமுக சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணி என புதிய அணியை உருவாக்கியது.

இதை சுட்டிக்காட்டித் தான் தூத்துக்குடியில் நடைபெற்ற இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையின் போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: கடந்த காலத்தில் இளைஞரணி செயலாளராக இருந்த நம்முடைய தலைவர் தான் இன்றைய முதலமைச்சராக பணியாற்றுகிறார். உங்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது என்று இளைஞரணியினருக்கு அறிவுரை வழங்கி பேசியுள்ளார்.

இந்நிலையில், திமுக இளைஞரணி மண்டலம் 9, தூத்துக்குடி வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கான நேர்காணல் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் வக்கீல் ஜோயல், இன்ப ரகு, அப்துல் மாலிக், பிரபு, இளையராஜா, ஆனந்தகுமார், ராஜா, பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர்கள் கலந்து கொண்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இளைஞரணிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களிடம் திமுக-விற்காக பங்கெடுத்துக் கொண்ட நிகழ்வுகள், போராட்டங்கள் குறித்து நேர்காணலின் போது கேட்கப்பட்டன.

இதில் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிஎம் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர்; அருண்சுந்தர், துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், மூர்த்தி, ராமசுப்பு, பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, கங்காராஜேஷ், கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் பேரிடர் நிதி வழங்கினார்

Next Post

ஸ்பிக் நகர் கராத்தே வீரர்களுக்கு தங்கப்பதக்கம்.

Next Post
ஸ்பிக் நகர் கராத்தே வீரர்களுக்கு தங்கப்பதக்கம்.

ஸ்பிக் நகர் கராத்தே வீரர்களுக்கு தங்கப்பதக்கம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In