முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி மையத்தில், மருத்துவர்களிடம் தக்க மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
மேலும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.


