தூத்துக்குடி
முத்துராமலிங்க தேவர் 116வது பிறந்தநாள் 61வது குருபூஜையை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டேவிஸ்புரத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
விழாவில் மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகாராஜா, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா, திமுக கிளைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, குமார், தமிழ்;நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மற்றும் நேதாஜி நற்பணி மன்றத்தை சேர்ந்த சந்தனகுமார், பொன்ராஜ், ராஜா, சுடலை, முத்துகிருஷ்ணன், பாலு, அர்ஜுனன், மூக்காண்டி, மணிகண்டன், பாண்டி, பாஸ்கர், முத்து, திமுக இளைஞர் அணி கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

