கொடைக்கானல், அக்,31
முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறையில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் முழு திருவுருவ சிலைக்கு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் வழக்கறிஞர் உசிலை சங்கிலி, மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம், மாநில பொருளாளர் ஆனந்தன், ஆகியோர் ஆணைக்கிணங்க,
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட அவை தலைவர் கோடை வி. ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் கூல்.சுரேஷ், ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பெருந்திரளானோர் பங்கேற்று பூம்பாறையில் உள்ள தேவர் முழு உருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெண்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு
மரியாதை செலுத்தினர். பூம்பாறையில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்த வந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் கூல்.சுரேஷ், கொடைக்கானல் ஒன்றிய தலைவர் சிவகுருநாதன். ஒன்றிய செயலாளர் முருகேசன். கார்த்தி. சிவகுமார். அருண்.
மாவட்ட தொண்டரணி செயலாளர் பெஞ்சமின் , கொடைக்கானல் நகர பொதுச் செயலாளர் பிரேம் மற்றும் நகர நிர்வாகிகள் ஒன்றிய இளைஞரணி தலைவர் சரவண பாலாஜி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் எஸ்.விக்கி, ஒன்றிய தொண்டரணி துணை செயலாளர் தங்கப்பாண்டி, நகர இளைஞரணி பொது செயலாளர் அரவிந்த் மற்றும் கொடைக்கானல் ஒன்றிய தலைவர் தமிழ், கொடைக்கானல் நகர தலைவர் ரமேஷ், நகர இளைஞரணி தலைவர் சிவக்குமார், மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

