தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி மகன் திருமணம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை தந்தார். திருமண மஹாலில் மணமக்களுக்கு தன் கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: அப்போது அவர் கூறுகையில், ஆளுநர் மாளிகைக்கு முன்நடந்த சம்பவத்திற்கு கண்டிப்பாக நடவடிக்கை தமிழக அரசு எடுக்கும்;. தமிழ்நாட்டில் காவல்துறையை பொறுத்த அளவிற்கு இந்த சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. இது முன்னுதாரணமாக இந்த நடவடிக்கை இருக்கும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் தேவையில்லாத சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது. குறிப்பாக இளைஞர்களை பொறுத்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொள்கிறார். சமீபத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதை சொல்லியிருக்கிறார். இது அப்பட்டமான பொய். மருது பாண்டியர் நினைவு நாள் அன்றைக்கு அமைச்சர்கள் ஐந்து பேர் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பி இருக்கிறார்கள். சங்கரய்யா 102 வயது வரை உள்ளார்.. வெள்ளையனை வெளியேற்ற 9 வருடம் சிறையில் இருந்து இருக்கிறார். அதனால் அவருக்கு கல்வி கிடையாது கல்லூரிக்கு போக முடியவில்லை. சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா-விற்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக முடிவு செய்து இருக்கிறார்கள். ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் ஆளுநர். நவம்பர் 2ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுவரைக்கும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார். மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொன்றார். அந்த மாதிரி இயக்கங்களுக்காக ஆளுநர் ஏஜெண்டாக செயல்படுகிறார். பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக இந்தியா கூட்டணி தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறும். அதற்கு முன்னுதாரனமாக 5 மாநில தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத பணம் வீக்கம், பொருட்கள் விலை உயர்வு தற்போது உள்ளது. ஆரியத்தை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.
அண்ணாமலை கூறுவது போல் சொன்னால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தான் குப்பையில் போட வேண்டும். ஏனென்றால் ஆரிய சர்ச்சையை கொண்டு வந்தது இவர்கள் தான். திராவிடம் இன்று அல்ல வெள்ளைக்காரனுக்கு முன்பே ஆயிரம் வருடத்திற்கு முன்னரே திராவிடம் தமிழ் மொழி பேசுபவர்கள் தான். தென்னிந்தியாவில் வாழ்கிறவர்கள் திராவிடர்களே. ஆயிரம் வருடத்திற்கு முன்பே கல்வெட்டுகளில் இருக்கிறது. மதிமுகவை பொருத்தவரையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தான் நாங்கள் பார்க்கின்றோம். முதலமைச்சர் கூறியது போல் யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் முக்கியம். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் கிடையாது. கட்சி தலைமை மற்றும் தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள்.
அண்ணாமலை சிறந்த ஒரு காவல்துறை அதிகாரி அவரது உழைப்பை நான் பாராட்டுகிறேன். தவறான சித்தாந்தத்திற்காக தவறாக உழைப்பை செலுத்துகிறார். உழைப்பு விரையமாகி கொண்டு இருக்கிறது. மேலும், அவருடைய செயல்பாடுகளை பொறுத்தவரையில் சராசரி அரசியல்வாதியாக தான் பேசுகிறார் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது, மதிமுக மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை வக்கீல் செல்வம், ரமேஷ், இளைஞரணி செயலாளர்கள் ரமேஷ், சரவணபெருமாள், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சரவணன், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பொன்ராஜ், பொம்முதுரை, முருகேசன், தொம்மை, செந்தாமரை கண்ணன், செல்லப்பா, சுந்தர்ராஜ், அனல் செல்வராஜ் உள்பட மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

