தூத்துக்குடி
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநகராட்சி நகரின் தூய்மை சுற்றுச்சூழல் மேம்பாட்டு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்;றின் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்து பராமரித்தல் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை சுத்தம் செய்து வேலி அமைத்து அடர்காடுகள் முறையில் அதிகப்படியான மரங்களை நடுதல் நகரின் பிரதான சாலை சந்திப்புகளில் நீருற்றுகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நகரின் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் கழிவுநீர் தருவைகுளம் கலவை உரங்கிடங்கில் அமையப்பெற்ற சுமார் 28 எம்எல்டி கொள்ளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரினை திறம்பட பயன்படுத்தும் விதமாகவும் இயற்கை சூழலை மேம்படுத்தும் விதமாகவும் அதிகப்படியான மரங்களை நட்டி பாராமரிக்க திட்டமிட்டத்தின் அடிப்படையில் இதுவரை சுமார் 50 ஆயிரத்திற்கு மேம்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 60 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாநகராட்சி மாவட்ட வனத்துறை தூத்துக்குடி விமான நிலைய ஆணையரகம் இணைந்து விமான நிலைய ஆணையகரத்தில் சமூக கூட்டாண்மை நிதியின் கீழ் 93லட்சம் மதிப்பீட்டில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை மியாவாக்கி என்ற அடர்காடுகள் முறையில் நடும் நிகழ்வும் மாநகராட்சி சார்பாக பலன் தரும் மரங்களை நடுவதற்கு உத்தேசித்து ஓரு ஏக்கர் பரப்பளவில் இனிப்பு புளி, நாட்டு புளி, சிவப்பு புளி, குடம்புளி கொடுக்காபுளி, போன்ற பல்வேறு வகையான புளியமரங்களும் சுமார் ஓரு ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் பறவைகளுக்கு பயன்படும் வகையில் ஆலமரங்களும் கால்நடைகளுக்கு ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்கி தரமான தீவனங்கள் ஆண்டுதோறும் கிடைக்க வழிவகை செய்யும் விதத்தில் பொதுமக்களுக்கு நல்ல சத்தான பால் கிடைக்கும் வகையிலும் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்து நியாய விலையில் விற்பனை செய்யவும் உத்தேசித்து சோதனை முயற்சியாக ஓரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகப்படியான புரசத்தும் குறைந்த அளவு கழிவுகளுடைய கோளப் எஸ் 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைத்தல் நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி தலைமை வகித்து அத்திட்டத்தை தருவைகுளம் உரக்கிடங்கு மையத்தில் தொடங்கி வைத்தார்.
அவரை தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன், விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், மரக்கன்று நட்டினார்கள்.
விழாவில் பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் சுமதி, மாநகராட்;சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

