• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அமைச்சர் கீதாஜீவன் மணிவிழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

policeseithitv by policeseithitv
October 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அமைச்சர் கீதாஜீவன் மணிவிழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் – ஜீவன் ஜேக்கப் ஆகியோரின் மணி விழாவையொட்டி, சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்;த்துப் பெற்றனர்.

தூத்துக்குடி பெரியசாமி, எபனேசர் ஆகியோருக்கு மகளாக பிறந்த கீதாஜீவன் எம்.காம்., பி.எட்., பட்டப்படிப்பை முடித்து ஆசிரியராக பணியாற்றினார். இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றிய பெரியசாமி தனது அரசியல் வாரிசாக அரசியலுக்கு அறிமுகப்படுத்தி 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். அவர் பணியாற்றிய காலத்தில் சிறந்த மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் விருது பெற்றார்.

2006-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதன்பின் திமுக தலைவரான கருணாநிதி அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2வது முறையாக 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிப் பெற்றார். அதன்பிறகு 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சராக பதவியேற்று, பணியாற்றி வரும் கீதாஜீவன் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது பணியை பாராட்டி இரண்டு முறை தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ‘பெண் சிங்கம்’ என்று பாராட்டை பெற்றார்.

ஜீவன் ஜேக்கப் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் செயலாளராகவும், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அமைச்சர் கீதாஜீவன் – ஜீவன் ஜேக்கப் தம்பதியினரின் மணிவிழா வரும் 1-ம் தேதி மாலை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு அரசுதுறையை சார்ந்த அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பலர் மணிவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Previous Post

வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் இல்லத் திருமண விழா – மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மரக்கன்று நடப்பட்டது. கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் லெட்சுமிபதி, பங்கேற்பு

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மரக்கன்று நடப்பட்டது. கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் லெட்சுமிபதி, பங்கேற்பு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மரக்கன்று நடப்பட்டது. கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் லெட்சுமிபதி, பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In