தூத்துக்குடி.
ஆயுத பூஜையை தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும், வாகன ஓட்டிகளை பொறுத்த வரையில் ஆயுதபூஜை தினத்தை தங்களது தினமாக உற்சாகத்துடன் கொண்டாடி வருவது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக, தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், தூத்துக்குடி மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான கவுன்சிலர் ரெங்கசாமி ஆயுத பூஜை விழாவில் கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார்.
முன்னதாக, ஆட்டோக்களுக்கு வாழைக்கன்று தோரணம் கட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வக்கீல் விஜயசுந்தர், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் ராஜு, வக்கீல்கள் பால் ஜோசப், சதீஸ்குமார், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் முருக ராஜ், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, உள்பட ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

