தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொதிக்குட்பட்ட தாளமுத்துநகர் கீழ்பகுதி சமீர்வியாஸ்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீமுனிஸ்வரர் முத்தராம்மன் திருக்கோவில் 14ம் ஆண்டு தசரா திருவிழா கடந்த 9 நாட்களாக அம்மன் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
10 நாள் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தாளமுத்துநகர் பிரதான மெயின் ரோட்டில் நடைபெற்ற நிகழ்வை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் சாமி தரிசனம் செய்து அம்பாள் வீற்றிருந்த வாகனத்தை இயக்கி வைத்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்;ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, ஸ்ரீமுனிஸவரர் முத்துராம்மன் திருக்கோவில் தர்மகர்த்தா ஆறுமுகநயினார், செயலாளர் மாரிச்செல்வம் பொருளாளர் காசிராஜன், துணைத்தலைவர் இசக்கி, துணைச்செயலாளர் சரவணக்குமார், மற்றும் செல்வம், முத்தாரம்மன் கோவிலில் கணேசன் பறவை காவடி எடுத்தார், சூரசம்ஹாரத்தை யொட்டி முத்தாரம்மனுக்கு மாலை அணிவித்திருந்த பக்தர்கள் உள்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

