தூத்துக்குடி
இந்து சமய அறநிலைத்துறை சிவன்கோவிலுக்குட்பட்ட மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் தசார திருவிழா ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலூர் கிராமதேவதை பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழாவையொட்டி கடந்த 9 நாட்களாக அம்மன் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றம் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்து திருக்கோவிலை நல்ல முறையில் பாராமரித்து ஆன்மீக பணியை மேற்கொள்ள வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அறங்காவலகுழு தலைவர், பச்சைசாத்து குழு தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் வக்கீல் செந்தில்குமரன், அறங்காவலர்கள் மஞ்சுளா, மகாராஜன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தேரடி முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
.

