தூத்துக்குடி
தூத்துக்குடி நெல்லை தென்காசி திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரிக்கப்படாத ஓருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக 67 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி மறைந்த மாவீரன் கே.வி.கே சாமிக்கு தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில் மார்பளவு சிலை இருந்த போது அது சிதிலடைந்த நிலையில் இருந்ததை பாராமரிப்பு செய்து புதிய கே.வி.கே சாமி மார்பளவு சிலை திறப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி திறந்து வைத்து பேசுகையில்
கலைஞரால் மாவீரன் என்று அழைக்கப்பட்ட கே.வி.கே சாமி தனக்கென்று குடும்பமின்றி மக்கள் சேவையை மகத்தான முறையில் செய்தவர் போர்குணம் படைத்தவர் தொழிற்சங்கத்தை நிறுவி தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டவர் அண்ணா ஓரு முறை பேசும் போது திமுக ஆட்சி அமைந்தால் அதில் ரானுவ தளபதியாக இருப்பார் என்று கூறினார் திமுக வராலாற்றில் யாரும் கே.வி.கே.சாமியை மறக்க முடியாது கலைஞர் எப்போது தூத்துக்குடி வந்தாலும் இவர் பெயரை உச்சரிப்பார் அப்படி சிறப்பாக பணியாற்றியவர் அவரை போல் போராட்ட குணத்தோடு பணியாற்ற வேண்டும். 86ல் நெல்லையில் இருந்து தூத்துக்குடி பிரிந்த பின்பு திமுக மாவட்ட செயலாளராக பெரியசாமி 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு பின்பு இரு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மாவட்ட கழக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இது போல் பாராமரிப்பு இல்லாமல் இருப்பதை பாராமரிக்கவும் மாவட்டத்தில் புதிய சிலைகள் வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டத்தின்படி புதூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இரு இடங்களில் கலைஞர் சிலை தூத்துக்குடியில் பெரியசாமி சிலை சொந்த இடத்தில் வைக்கப்படுகிறது. தமிழகம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது. பலர் பொய் பிரச்சாரம் மூலம் திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஓரு காலமும் நடக்காது. யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் மக்கள் நலன்தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து முதலமைச்சரின் வழியில் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்; கனகராஜ்,பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்;ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, சீனிவாசன், துணை அமைப்பாளர் பெனில்டஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், நாராயணன், மாநகர அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, வைதேகி, ஜாக்குலின்ஜெயா, பொன்னப்பன், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ஜெயசீலி, விஜயகுமார், மரியகீதா, கண்ணன், ரெக்ஸின், சுதா, சுப்புலட்சுமி, மும்தாஜ், அரசு வக்கீல் மாலாதேவி, வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், சுப்பையா, சதீஸ்குமார், பொன்னுச்சாமி, முத்துராஜா, செல்வராஜ், சுரேஷ், பொன்ராஜ், ராஜாமணி, கங்காராஜேஷ், அனல் சக்திவேல், வட்டப்பிரதிநிதி திலகர், பாஸ்கர், பேச்சிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மகளிரணி ரேவதி, பெல்லா, சத்யா, சந்தனமாரி, மற்றும் வேல்சாமி, அற்புதராஜ், சக்திவேல், ஜெயக்குமார்ரவி, சுப்பிரமணி, கருணா, மணி, மகேஸ்வரன்சிங், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

