தூத்துக்குடி, அக்,23.
அதனால் தேவர் சமூகத்தின் மீது கோபம் கொண்டு தென்மாவட்டங்களில் குறிப்பாக தேவர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தேவர் சமுதாய மக்களை தனது ரவுடி கும்பல் மூலம் தூண்டிவிட்டு முக்குலத்தோரை குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்கிறார். அதன் ஒரு பகுதியாகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்குலத்தோரை வழக்குகளில் சிக்க வைத்து அவர்களை சிறைக்கு அனுப்பி விட்டால் தனது வெற்றிக்கு பிரச்சனை வராது என என்னி வரும் அக்டோபர் 30 அன்று 116 வது தேவர் குரு பூஜையின் போது முக்குலத்தோர் அதிகமாக கூடும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோவிலுக்கு வந்து பிரச்சனையை தூண்ட நினைக்கிறார். அதற்காகதான் 10 நாட்களுக்கு முன்பே தான் வரப்போவதாக விளம்பரப்படுத்தி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார். தேவரினத்தின் துரோகி எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன்னிற்கு வருவதை முக்குலத்து சமுதாய மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே பணத்தை வைத்து சிலரை விலைக்கு வாங்கி தன் செல்வாக்கை நிலை நிறுத்த புன்னிய பூமியாம் பசும்பொன்னிற்கு வந்து கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியை பசும்பொன்னிற்கு வர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுகொள்கிறேன். 48 மணி நேரத்திற்குள் எடப்பாடி வரும் அறிவிப்பை நிறுத்தாவிடில் 27ம் தேதி 10 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு எங்களது இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் கொடநாடு கொலைவழக்கில் எடப்பாடியை கைது செய்ய வேண்டும் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் வன்முறையை துண்டி திமுக ஆட்சியை கலைக்க சதி செய்கிறார். எடப்பாடி என்று கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட ஒருங்கினணப்பாளர் கருங்குளம் சங்கர், மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிலிங்கம், தேவர் காலணி பாலா பொன்முத்து உடனிருந்தனர்.

