அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சி.த.செல்லப்பாண்டியன்.
இந்நிலையில், மாநில வர்த்தக அணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு தூத்துக்குடிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு 3வது மைல் அருகே அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, தென்பாகம் காவல்நிலையம் அருகேயுள்ள அம்பேத்கார் சிலை, குரூஸ் பர்னாந்து சிலை, காந்தி சிலை, காமராஜர் சிலை, அண்ணா சிலை, வ.உ.சி சிலை ஆகிய பெருந்தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பெருந்தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும் போது 50க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்களிலும், 100க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களிலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான தொண்டர்கள் புடைசூழ அணிவகுத்த சென்ற சம்பவம் தூத்துக்குடியில் அதிமுகவினர் மத்தியில் எழுச்சியை உருவாக்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக தலைமை யாரை நிறுத்தினாலும் அவர்களை தமிழகத்திலே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து வெற்றிக்கனியை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்பிப்போம். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டியை வலுவாக அமைத்து வருகிற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராவோம். அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எந்தவித ஆலோசனை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். முழுமூச்சாக நாம் தேர்தல் களத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார். இதனால் தூத்துக்குடி அதிமுகவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியடைந்து ஜெ. தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அதன்பிறகு அதிமுகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர். தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லாமல் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்து செயல்பட்டதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு வந்தனர். மறைந்த முதல்வர் ஜெ. வின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இவர் விளங்கியதால், ஜெ. மறையும் வரை தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்டச் செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவை பொறுத்தவரையில், மாநில அணிச்செயலாளர் பதவிக்கு கட்சியில் சீனியராகவும், கட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் நபர்களை தேர்வு செய்து மாநில அணிச் செயலாளராக நியமிப்பது வழக்கம். அதன்படி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சி.த.செல்லப்பாண்டியனின் செயல்பாடுகளை நன்கறிந்து மாநில வர்த்தக அணி செயலாளராக இவரை நியமித்துள்ளார்.




சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள பெருந்தலைவர்களின் சிலைக்கு அணிவிக்கும் மரியாதை செய்யும் நிகழ்வில்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வீரபாகு, தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம், ஆழ்வை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், ஆர்.முருகன், ஜெயக்குமார், எம்.முருகன், ராஜ் குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

