தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த பொன் ராஜேஸ்வரி அமைச்சர் கீதாஜீவனிடம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டும் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும் தையல் இயந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனையடுத்து அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்ற வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்தப் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வழங்கினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்டச்செயலாளர் கதிரேசன், பெருமாள் கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை மரியாதை நிமித்தமாக சந்தித்ததுடன் சில கோரிக்கைகளையும் முன் வைத்ததையடுத்து, நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.


தூத்துக்குடி – தனசேகரன் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டதற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் உடனிருந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு பொதுமக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டதற்கும் மற்றும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் வேகத்தடை அமைத்துக் கொடுத்ததற்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். கவுன்சிலர் முத்துவேல் உடனிருந்தார்.

