• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரசியலும், ஆன்மீகமும் எனக்கு இருகண்கள் – திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பேச்சு

policeseithitv by policeseithitv
October 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரசியலும், ஆன்மீகமும் எனக்கு இருகண்கள் – திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

ஜோதிபாசு நகரில் அமைந்துள்ள ஜோதி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் 4-ம் ஆண்டு தசரா விழா சிறப்பாக நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஜோதிபாசு நகரில் அமைந்துள்ள ஜோதி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து வந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பின் நடைபெற்ற கிராமிய பக்தி நாட்டுபுற இன்னிசை நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கினார். 8வது வார்டு ஜோதிபாசுநகர் கிளை செயலாளர் வேல்ராஜ், நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, நாட்டுபுற இன்னிசை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில்: மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஏழை-எளிய நடுத்தர மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இந்த பகுதிக்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மட்டுமின்றி கருமாரியம்மன் ஆலயத்திற்கும் பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் உலக பிரசித்திப் பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். அதன் அடிப்படையில் என்னுடைய பொதுவாழ்வில் அரசியலும், எம்மதமும் எனக்கு சம்மதம் என்ற அடிப்படையில் ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த பகுதியில் விடுபட்ட சில சாலை பணிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதன் அடிப்படையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனையின்படி பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன், என்று பேசினார்.

விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் வசந்த குமாரி, கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், ஆனந்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, திமுக கிளை செயலாளர் சந்திரசேகர், இளைஞரணி கௌதம் உள்பட அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு – பயணிகள் குஷி

Next Post

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளி கூடுதல் வகுப்பறைகளுக்கு 100 ஸ்மார்ட் பெஞ்ச் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

Next Post
தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளி கூடுதல் வகுப்பறைகளுக்கு 100 ஸ்மார்ட் பெஞ்ச் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளி கூடுதல் வகுப்பறைகளுக்கு 100 ஸ்மார்ட் பெஞ்ச் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In