• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள்  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

policeseithitv by policeseithitv
October 11, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள்   முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

கலைஞர் மகளிர் பொருளாதார நிலை உயர்விற்காகவும், ஆணுக்கு பெண் சமஉரிமை படைத்தவராகவும் விளங்கிடும் வகையில் பலஎண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வந்தார். அவர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக பலஎண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்

அதனடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, கல்வியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு முதல் தற்போது தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் என மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000-ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000- ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தார். இந்த முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப் பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வுசெய்யப்பட்டது.

அண்ணா பிறந்தநாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்;தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000- பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய தேதி வரை 2,39,582 மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

பயனாளி ரேவதி தெரிவிக்கையில்:-

என் பெயர் ரேவதி. நான் தூத்துக்குடி மாவட்டம் முனியசாமிபுரத்தில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.  நான் தினசரி கூலிவேலை தான் பார்த்து வருகிறேன். என்னுடைய கணவரும் அன்றாட கூலிவேலை தான் செய்றாங்க. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிச்சாங்க. பிறகு நான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பித்தேன்.   எனக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் என்னுடைய அக்கவுண்டுல ஏறியிருச்சு. ரொம்ப சந்தோசமாக இருக்கு. இந்த 1000 ரூபாய் என்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவுக்கு, அன்றாட குடும்ப செலவுக்கு மிகுந்த உதவியா இருக்கும். இதுபோன்று மகளிர் நலன்காக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

பயனாளி கலா தெரிவிக்கையில்:-

என் பெயர் கலா. நான் என் குடும்பத்துடன் மூன்றுசென்ட் அந்தோணியார்புரத்துல வசித்து வருகிறேன். நான் தினசரி கூலிவேலைக்கு போயிதான் குடும்பத்த பாத்துகிட்டு இருக்கிறேன். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு  எங்க ஏரியால முகாம் நடந்தது.  அங்கு போய் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துல விண்ணப்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்னுடைய செல்லுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தேர்வு என்று மெஸேஜ் வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. எனக்கு இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 5 மணிக்கு ஏறியிருச்சு. மாதம் 1000 ரூபாய் கிடைக்கிறதனால இதயநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்னுடைய மகனுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னைப் போன்ற ஏழை, எளிய மகளிர்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம் செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியை சேர்ந்த கராத்தே வீரர்கள் சாதனை..

Next Post

தூத்துக்குடி பேருந்து நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Next Post
தூத்துக்குடி பேருந்து நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி பேருந்து நிலையம் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In