திருநெல்வேலி மாவட்டம் ரோஸ்மேரி பப்ளிக் பள்ளியில் வைத்து 7:10:23 அன்று தாக்சின் சகோதியா அமைப்பின் மூலம் தென் மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் அமைந்துள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஜெபின் சஞ்சய் சண்டை பிரிவில் 25 எடை பிரிவிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் தங்கப்பதக்கமும், 50 எடைக்கு மேற்பட்ட சண்டை பிரிவில் ஜெனிஸ் ஆண்டனி வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் ப்ளோரா மேரி , பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி இம்மாகுலேட் மற்றும் பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.

