• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்

policeseithitv by policeseithitv
October 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 53 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது-. அதன் இறுதி கட்டப் பணிகள், வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டில் வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. வந்து பார்வையிட்டு பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர். தற்போது, இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சுமார் ரூ.53 கோடி மதிப்பில் 4 தளங்களாக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது-. தரை தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் 49 கடைகள், 2வது மற்றும் 3வது தளத்தில் 29 கடைகள் என சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது-. பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வகையில் திருச்செந்தூர், குலசேகரபட்டினம் கோவில்கள், பனிமயமாதா பேராலயம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை போன்றவை வரையப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் பொன்மொழிகளும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் திறக்கப்பட்ட அன்றே இங்கிருந்தே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். ஏற்கனவே பழைய பேருந்து நிலையமாக இருந்த போது, அண்ணா பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. அதே போன்று ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் வரும் 8ம் தேதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். கனிமொழி எம்.பி, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்;சி ஆணையர் தினேஷ்குமார், இணை ஆணையர் ராஜராம், செயற்பொறியாளார் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், சேகர், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சியில் தசரா பண்டிகைக்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

Next Post

தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தகவல்

Next Post
தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தகவல்

தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In