தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்
மக்களுக்காக அரும்பணியாற்றிய ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க சட்டமன்றத்திலே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சுமார் ரூ.77.87 லட்சம் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலிகாட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
பொதுமக்களின் கோரிக்கையாக சில ஆலோசனைகள் படி இந்த சிலை விரைவாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உத்தரவின்படி இந்தபணிகளை செய்தித்துறை மூலமாக செய்து வருகிறோம். அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரமாமுனிவருக்கு காமநாயக்கன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் 13ம் தேதி திறந்து வைக்கிறார். இதுபோன்ற பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு ஓப்படைக்கப்பட்டு வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்திற்கும் அரசாணை வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட பரமக்குடியில் சமூக நீதிக்காக குரல் கொடுத்த தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தையும் பார்வையிட்டு வந்துள்ளோம். அதேபோல் பசும்பொன்னில் தேவருக்கு அவரது சொந்த ஊரிலே அவரது நினைவிடம் அருகில் மண்டபம் வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்திருக்கிறது. அதையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கை வரவர நிதிநிலைக்கேற்ப பணிகளை செய்து வருகிறோம். தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியான பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனது தலைமையில் உரியமுறையில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், அலுவல்சாரா உறுப்பினர்கள் 5 முறை கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து பத்திரிகையாளர்களுக்கு உரியமுறையிலே அதற்கான பணிகளை செய்திருக்கிறோம். வாரியத்திலே இருக்கக்கூடிய அலுவலர் சார்ந்த உறுப்பினர்களானாலும் சரி, அலுவல் சாரா உறுப்பினர்களானாலும் சரி தங்களுடைய கருத்துக்களை கூறும் போது அதை ஏற்றுக்கொள்ளப்பட்டு உரியமுறையில் பரிசீலித்து வருகிறோம். பத்திரிகையாளர்களுக்கு உதவிகள் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களை ஊழியர் என்று ஏற்றுக் கொண்டால் அதற்குரிய சான்றிதழ் எங்களுக்கு வேண்டும். வாரியத்திலே பதிவு செய்து கொள்பவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது. விதிமுறைகள் அடிப்படையில் உரிய சான்றிதழ் வழங்கினால் யாராக இருந்தாலும் உதவிகள் செய்து கொடுக்கப்படும். சில நிறுவனங்கள் நியூஸ் ஏஜெண்ட் என்று அவர்களுக்கு சான்று வழங்க மறுக்கிறார்கள். போலி பத்திரிக்கையாளர்கள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதை உரிய முறையில் பரிசீலித்து கொண்டிருக்கிறோம். அரசு நிச்சயமாக அதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர்கள் குழு அமைத்து அதன் மூலமாக அதை ஆய்வு செய்து உண்மையான பத்திரிக்கையாளர்கள், போலி பத்திரிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து செய்தித்துறை நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, செய்தித்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வராஜன், பொதுப்பணித்துறை கோட்டப்பொறியாளர் தம்பிரான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், வட்டாட்சியர்கள் பிரபாகரன், மல்லிகா எட்டயபுரம் பேரூhட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கந்தசாமி, கனகராஜ், பொன்னப்பன், ரெங்கசாமி, இசக்கிராஜா, பவாணி, ரெக்ஸின், மாவட்;ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்;ந்து எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ரூ.5.06 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒளி-ஒலிகாட்சியின் செயல்பாட்டினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தொடங்கி வைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று படத்தினை பார்வையிட்டார்.

