• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளை யூரணியில் கிராம சபை கூட்டம்: சாலை பணிகளை துரிதப்படுத்திய பஞ்.தலைவர் சரவணக்குமாரை மனதார பாராட்டிய பொதுமக்கள்!!!

policeseithitv by policeseithitv
October 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளை யூரணியில் கிராம சபை கூட்டம்: சாலை பணிகளை துரிதப்படுத்திய பஞ்.தலைவர் சரவணக்குமாரை மனதார பாராட்டிய பொதுமக்கள்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,
அக்,3

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்தக் கூட்டம்
மாப்பிள்ளையூரணி மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில்
நேற்று காலை
ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாப்பிள்ளையூரணி கிராம பகுதி பகுதி பொதுமக்கள் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு போர்க்கால அடிப்படையில்
அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்த பஞ்சாயத்து தலைவர் சரவண குமாருக்கு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தாளமுத்து நகர் காவல் நிலையம்
அமைந்துள்ள சாலை மற்றும் ஒரு சில இடங்களில் உள்ள சாலைகளையும் விரைவில் அமைத்து தருமாறு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
அந்தப் பகுதியில் சாலை போடுவதற்கு ஒப்பந்தப்புள்ளி டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த சாலைகளும் சிறந்த முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைத்து தரப்படும் என தெரிவித்தார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கிராமசபை கூட்டத்தில் பேசுகையில் இந்த கிராமப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 23 சென்ட்இடம் மீட்கப்பட்டுள்ள
நிலையில்
அதில் தண்ணீர் தொட்டி உள்பட மக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை விரைவில் உருவாக்கவுள்ளோம்.என்று தெரிவித்தார்.
ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நீர்தேக்க தொட்டி அமைக்கப்படவுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடுக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டுள்ளது.என்று தெரிவித்தார்.
பின்னர் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊராட்சியின் தனிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் கலைஞர் வீடுவழங்கும் திட்டம் கணக்கெடுப்பு
உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த
கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி,
சுகாதார ஆய்வாளர் வில்சன், மின்வாரிய பணியாளர்,
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, , மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி,கௌதம், சமூக ஆர்வலர்கள் வக்கீல் மாடசாமி, சங்கரன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தாளமுத்துநகர் சப் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், பள்ளி மாணவிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில்  நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு “குட் பை ” பஞ். தலைவர்  சரவணக்குமார் அதிரடி நடவடிக்கையால் கிராம மக்கள்  பெரும் மகிழ்ச்சி!!

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு “குட் பை ”  பஞ். தலைவர்   சரவணக்குமார் அதிரடி நடவடிக்கையால் கிராம மக்கள்   பெரும் மகிழ்ச்சி!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு "குட் பை " பஞ். தலைவர்  சரவணக்குமார் அதிரடி நடவடிக்கையால் கிராம மக்கள்  பெரும் மகிழ்ச்சி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In