தூத்துக்குடி,
அக், 2
தேசப்பிதா காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 49 வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் மற்றும் காந்தி சிலைகளுக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு
தூத்துக்குடி
வ உ சி மார்க்கெட் அருகே உள்ள
காமராஜரின் முழு உருவ சிலைக்கு மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் திரளான
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக கல்விக்கண் திறந்த காமராஜர் வாழ்க என கோஷம் எழுப்பினர்.



இந்த நிகழ்வின்போது
பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ்,
தருவைகுளம் சண்முகவேல், சிவத்தையாபுரம் சரவணன்,பட்டு ராஜா, தினேஷ், கார்த்திக், கணேஷ்,
பேப்பர் ஸ்டோர், கணேசன், டெய்லர் சரவணன், கதிரேசன், பெத்துவிஷ்ணு, கூட்டாம்புளி கார்த்திக், குமார், கதிர், அஸ்வின், புதுக்கோட்டை அருண், ஹரி, நாகர்கோவில் கணேசன், பாலமுருகன், வெங்கடேஷ், உட்பட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள், மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள எஸ் பி மாரியப்பன் கட்சிப் பணியில் மும்மரமாக தூத்துக்குடியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாரியப்பன் தலைமையில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

