தூத்துக்குடி,
அக், 1
தூத்துக்குடி சேர்வைக்காரன் மடத்தில் கண்ணன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பணிகள் விளையாடியது. இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை வென்ற அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 12,000 மற்றும் கோப்பை
ஆகியவற்றை சேர்வைகாரன் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் ஆகியோர் வழங்கினர்.

2 வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 10000 மற்றும் கோப்பையை பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் வழங்கினார். 3 வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 8000 பரிசுத்தொகையை சக்கம்மாள் புரம் ராஜ் பில்டர்ஸ் வழங்கினர். 4 வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 6 ஆயிரம் மற்றும் கோப்பையை சகுந்தலா மொபைல்ஸ் முத்தமிழ் நாடார் வழங்கினார்.
5வது இடம் பிடித்த கிரிக்கெட் அணிக்கு ரூ 6 ஆயிரம் மற்றும் கோப்பையை
நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் கோவை
உரிமையாளர் யோபு சாலமன் வழங்கினார். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 10000 பரிசுத்தொகை மற்றும் கோப்பையை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தொழிலதிபர் எஸ் பி மாரியப்பன் வழங்கி வெற்றி பெற்ற அணியை வாழ்த்தி பாராட்டினார். அவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், மற்றும் நிர்வாகிகள் சரவணன், ராஜ், தினேஷ், வின்சென்ட், அருண், கதிர், பெத்து விஷ்ணு, ரஞ்சித், அலாட் குமார், மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

